ADDED : ஜன 27, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து அதில் மாற்றங்களை செய்ய, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., திட்டம் தீட்டி வருகின்றன. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கைப்பாவையாக பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார்.
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்.,
எந்த பிரச்னையும் இல்லை!
ஒன்பது மாதங்களுக்குப் பின், என் தாய்வீடான பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. கர்நாடகாவில் பா.ஜ.,வை வலுப்படுத்துவேன். காங்கிரசில் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை.
ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,
தலைமைக்கு கட்டுப்படுவேன்!
பீஹார் அரசியல் நிலவரம் குறித்து, பா.ஜ., தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; சிலர் வெளியேறலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,

