ADDED : மார் 26, 2024 08:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்: பஞ்சாப் காங்., எம்.பி., ரவனீத்சிங் பிட்டு இன்று அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வுக்கு தாவினார். பாராளுமன்ற லோக்சபாவிற்கு 7 கட்டங்களாக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் லூதியானா லோக்சபா தொகுதி காங்., எம்.பி.யான ரவனீத்சிங் பிட்டு அக்கட்சியிலிருந்து திடீரென விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பஞ்சாப் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை மக்களுக்காக செய்து உள்ளனர். பஞ்சாபில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
காங்., எம்.பி. பா.ஜ.விற்கு தாவியது இண்டியா கூட்டணியில் உள்ள காங்.,கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

