குடியரசு தின அணிவகுப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இடம்பெறும்!
குடியரசு தின அணிவகுப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இடம்பெறும்!
UPDATED : ஜன 23, 2026 08:07 PM
ADDED : ஜன 23, 2026 07:44 PM

புதுடில்லி: பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்திய எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் என ஏர் கமாடோர் மணீஷ் சபர்வால் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவைப் பாதுகாத்ததற்காக பாராட்டப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின 2026 அணிவகுப்பில் ராணுவ அலங்கார ஊர்தியில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படும் என்று ஏர் கமாடோர் மணீஷ் சபர்வால் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் எஸ்-400 விமானம் ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தினார்.
மொத்தம் 6,050 ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பார்கள். பைரவ், சக்திபான், யுஜிவி மற்றும் ஏடிஏஜிஎஸ் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களும் இந்த நிகழ்வில் இடம்பெறும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 17 அலங்கார ஊர்திகளும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த 13 அலங்கார ஊர்திகளும் அடங்கும்.
இந்தியாவின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். அணிவகுப்பின் போது மொத்தம் 30 அலங்கார ஊர்திகள் கர்தவ்ய பாதையில் இடம்பெறும்.எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது திறம்பட பயன்படுத்தப்பட்டது. அப்போது முதல் எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு மீதான கவனம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

