sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆபரேஷன் சிந்துாரில் புதிய சாதனை படைத்த எஸ் 400 கவசம்; சர்வதேச நிபுணர் வியப்பு

/

ஆபரேஷன் சிந்துாரில் புதிய சாதனை படைத்த எஸ் 400 கவசம்; சர்வதேச நிபுணர் வியப்பு

ஆபரேஷன் சிந்துாரில் புதிய சாதனை படைத்த எஸ் 400 கவசம்; சர்வதேச நிபுணர் வியப்பு

ஆபரேஷன் சிந்துாரில் புதிய சாதனை படைத்த எஸ் 400 கவசம்; சர்வதேச நிபுணர் வியப்பு

1


ADDED : ஆக 14, 2025 11:43 AM

Google News

1

ADDED : ஆக 14, 2025 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விமானப்படைத் தளபதி அமர்பிரித் சிங்கின் கருத்து சரியானது தான். இந்த தாக்குதலில் எஸ் 400 கவச அமைப்பு, சரித்திர சாதனை படைத்துள்ளது என்று சர்வதேச வான் வழித்தாக்குதல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நமது ராணுவம் மே 7ல் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

அந்த வகையில் இந்த சண்டையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர்பிரித் சிங் புதிய தகவலை கூறினார். இந்த தகவலுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.

இந்த சூழலில், விமானப்படைத் தளபதி அமர்பிரித் சிங்கின் கருத்திற்கு சர்வதேச நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஆஸ்திரியாவை சேர்ந்த புகழ்பெற்ற வான்வழிப் போர் நிபுணர் டாம் கூப்பர் கூறியதாவது:இந்தியா விமானப்படை தளபதி கூறியது பலரும் அறிந்த உண்மை தான். மே மாதம் முதலே இந்த விவரங்கள் எங்களுக்கு தெரியும்.

S-400 கவச அமைப்பு 300 கி.மீ., தொலைவில் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளது. தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தி வீழ்த்துவதில் இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

ஐந்து போர் விமானங்கள் மட்டுமல்ல; இன்னும் அதிகமான பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். உக்ரைன் போரிலும் ரஷ்யா, எஸ் 400 கவச அமைப்பை பயன்படுத்துகிறது. அங்கே, 200 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இலக்குகளே வீழ்த்தப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா செய்திருப்பது பெரிய சாதனை.

இந்திய விமானப்படை தனது எஸ்.400 தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை அமைப்பை பாகிஸ்தானின் எல்லைக்கு மிக அருகில் நிலைநிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதல் எல்லைக்குள் இருந்தபடி ஏவுகணைகளை வீசி இந்திய படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது, உண்மையிலயே துணிகரமான சாகசம் தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு பிரபலமான போர் நிபுணரான ஜான் ஸ்பென்சரும், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல், இந்தியாவின் தீர்க்கமான வெற்றி என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us