sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: 6 வாரங்கள் எஸ்ஐடிக்கு கேரளா ஐகோர்ட் அவகாசம்

/

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: 6 வாரங்கள் எஸ்ஐடிக்கு கேரளா ஐகோர்ட் அவகாசம்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: 6 வாரங்கள் எஸ்ஐடிக்கு கேரளா ஐகோர்ட் அவகாசம்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: 6 வாரங்கள் எஸ்ஐடிக்கு கேரளா ஐகோர்ட் அவகாசம்

1


ADDED : ஜன 05, 2026 01:26 PM

Google News

ADDED : ஜன 05, 2026 01:26 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்


சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது, துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசாரணை

இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ருக்கலாம் என சி.பி.ஐ.,க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் துாதரக ஊழியர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜனவரி 05) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அவகாசம்

மேலும், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். ஏற்கனவே வரும் ஜனவரி 19ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us