sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை ரயில் பாதை திட்டம்: பச்சைக்கொடி காட்டியது கேரளா

/

சபரிமலை ரயில் பாதை திட்டம்: பச்சைக்கொடி காட்டியது கேரளா

சபரிமலை ரயில் பாதை திட்டம்: பச்சைக்கொடி காட்டியது கேரளா

சபரிமலை ரயில் பாதை திட்டம்: பச்சைக்கொடி காட்டியது கேரளா

3


UPDATED : பிப் 06, 2026 05:41 AM

ADDED : பிப் 06, 2026 12:51 AM

Google News

3

UPDATED : பிப் 06, 2026 05:41 AM ADDED : பிப் 06, 2026 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: அங்கமாலி - எருமேலி சபரிமலை ரயில் பாதை திட்டத்துக்கு, பச்சைக் கொடி காட்டிய கேரள அரசு, 50 சதவீதம் நிதி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம் அங்கமாலி - எருமேலி இடையே, 110 கி.மீ., துாரம் சபரிமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ரூ.3,800 கோடி


அங்கமாலியில் இருந்து பெரும்பாவூர், மூவாட்டுப்புழா, தொடுபுழா மற்றும் பாலா போன்ற நகரங்களுக்கு, இந்த திட்டம் எளிதான இணைப்பை வழங்கும். முதல் கட்டத்தில், 8 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தாலும், அவை காலாவதியாகி விட்டன.

நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் முடங்கியது. பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், இந்த திட்டத்தின் மொத்த செலவு, 3,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 'இந்த ரயில் பாதை திட்டத்துக்கு மொத்த செலவில், 50 சதவீதம் பங்களிக்க வேண்டியுள்ள கேரள அரசு, நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசு பச்சைக் கொடி காட்டியதோடு, திட்ட செலவில், 50 சதவீத தொகையான, 1,905 கோடி ரூபாயை, ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.

உயிர் நாடி


கேரள மக்களின் நீண்ட நாள் கனவான சபரி ரயில் திட்டத்தை நனவாக்க, அம்மாநில அரசு முன்வந்துள்ளது. புனலுார் மற்றும் நெடுமங்காடு வழியாக, இந்த ரயில் பாதையை நீட்டித்து, விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகத்துடன் இணைப்பதற்கான திட்டமும் உள்ளது.

இது, கேரள மாநில மலைப் பகுதிகளுக்கு ஒரு உயிர் நாடியாகவும், கேரள பொருளாதாரத்துக்கு பெரிய உந்துதலாகவும் அமையும் என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

புத்துயிர் பெறும்



இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் தரும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. 2024ம் ஆண்டில் மட்டும், கேரளாவில் உள்ள ஒன்பது முக்கிய ரயில் நிலையங்களில், டிக்கெட் விற்பனை வாயிலாக, 1,471 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

சபரிமலை புதிய ரயில் பாதை திட்டம், அம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கேரள அரசின் ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளதால், சபரிமலை திட்டம் புத்துயிர் பெறுவதோடு, பணிகள் வேகமெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us