தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சபரிமலை நடை இன்று அடைப்பு

 சபரிமலை நடை இன்று அடைப்பு

 சபரிமலை நடை இன்று அடைப்பு


ADDED : ஜன 20, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சபரிமலை: சபரிமலையில் மகர விளக்கு சீசன் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்பட்டு, டிச., 27 இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்கு பின்னர் டிச.,30 மாலை நடைதிறந்து மகர விளக்கு கால சீசன் தொடங்கியது.

ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெற்றது. ஜன.,18-ல் நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது.

நேற்று மாளிகைப்புறம் மணிமண்டபம் முன்பு குருதி பூஜை நடை பெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பக்தர்களின் தரிசனம் நிறைவு பெற்றது.

மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.

அதன் பின்னர் மாசி மாத பூஜை களுக்காக பிப்., 12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படு ம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us