பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்
பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்
ADDED : ஆக 13, 2024 06:49 PM

புதுடில்லி: மருத்துவ கல்லூரி, மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் கடந்த 8-ம் தேதியன்று மருத்துவக் கல்லூரி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக உத்தரவுபடி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு,
* அனைத்து மருத்துவ கல்லூரிகள், நிறுவனங்களில் பாதுகாப்பு பணியிட சூழலை உறுதி செய்ய வேண்டும்.
* வார்டுகள், தங்கும் விடுதி, குடியிருப்புகள், உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்கு இரு காவலர்கள் இருக்க கொள்கை வகுக்க வேண்டும்.
* முக்கிய பகுதிகளில் ஊழியர்கள் வளாகத்தில் பாதுகாப்பாக செல்ல, அங்கு சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும்.
* மருத்துவ மாணவர்களுக்கு எதிரான எந்த ஒரு வன்முறை சம்பவங்கள் குறித்து கல்லூரி நிர்வாகம் உடனே விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

