ADDED : ஏப் 12, 2026 02:43 AM
முசாபர்நகர்: விடுமுறையில் வந்திருந்த கப்பல் மாலுமி, சாலை விபத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது தாய், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன், 24. வர்த்தக கப்பலில் மாலுமியாக பணியாற்றினார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
மோகன் மற்றும் அவரது தாய் முகேஷ், 55, ஆகிய இருவரும் ஷாம்லி நகருக்கு பைக்கில் வந்தனர். அங்கிருந்து நேற்று காலை தங்கள் கிராமத்துக்கு திரும்பினர்.
டில்லி - -டேராடூன் விரைவுச் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பைக்கில் இருந்த இருவரும் துாக்கி வீசப்பட்டனர். மோகன் அதே இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட முகேஷ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து, புகானா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
