UPDATED : ஜூன் 27, 2024 10:37 AM
ADDED : ஜூன் 27, 2024 09:02 AM

புதுடில்லி: நாடு முழுதும், ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதில் உள்ள முக்கிய அம்சங்கள்
புதிய சட்டங்களின் கீழ், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக செல்லாமலேயே, மின்னணு தகவல் தொடர்பு வாயிலாக புகாரளிக்கலாம்.
பூஜ்ய எப்.ஐ.ஆர்., அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக, ஒருவர் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம்
வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்
சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும்
புதிய சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகவல்களை பதிவு செய்த இரு மாதங்களுக்குள் வழக்கு முடிக்கப்படுவதை உறுதி செய்கிறது
சம்மன்களை மின்னணு முறையில் வழங்கலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க, சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய, அதிகபட்சம் இரு முறை வழக்குகளை நீதிமன்றம் ஒத்தி வைக்கலாம்
பாலினம் என்பதன் வரையறை தற்போது திருநங்கையரை உள்ளடக்கியது
பெண்கள், 15 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லது கடுமையான நோய் உள்ளவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் இடத்தில் காவல் உதவியைப் பெறலாம்.