sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவு: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா

/

சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவு: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா

சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவு: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா

சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவு: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா

25


ADDED : ஜன 28, 2025 05:52 PM

Google News

ADDED : ஜன 28, 2025 05:52 PM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவரான சாம் பிட்ரோடா, சட்ட விரோத குடியேற்றத்துக்கு ஆதரவாக பேசி, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டில்லியில் வரும் பிப்.5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டவிரோதமாக வரும் வங்கதேசத்தவர்கள் பற்றி சாம் பிட்ரோடா கருத்து தெரிவித்துள்ளார். டில்லி அரசியலில் வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக உள்ளது. போலீசாரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி வங்கதேசத்தவர்களை கைது செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் தான், 'வங்கதேசத்தவர் வேட்டையாடப்படுகின்றனர்' என்று பிட்ரோடா பேசியுள்ளார். குறிப்பிட்ட அந்த வீடியோவில் சாம் பிட்ரோடா பேசியதாவது:

பசியால் வாடும் ஏழைகளான குடியேறிகளை வேட்டையாடுவதை விட புவி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அவர்கள் இங்கு வருவதற்கு நிறைய வேலை செய்கிறார்கள். சட்டவிரோத குடியேற்றம் தவறு என்றாலும், நாம் சட்டவிரோதமாக வந்த வங்கதேசத்தவர்களையும், சிறுபான்மையினரையும் குறிவைத்து பிடிக்க மும்முரமாக இருக்கிறோம்.

நாம் அனைவரையும் உள்ளடக்க வேண்டும். நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், யாரும் (வளங்களை) பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வளத்தை அதிகரிக்கவே விரும்புகின்றனர்.

இவ்வாறு சாம் பிட்ரோடா தெரிவித்தார்.

சாம் பிட்ரோடா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளதாவது:ராகுலின் வலது கரமான சாம் பிட்ரோடா, சட்டவிரோத குடியேறிகளுக்காக வாதிடுவது பொறுப்பற்றது.

இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் எவ்வாறு நம் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் குடியேற்றுவதற்கு அனுமதித்தது என்று புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாம் பிட்ரோடாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல, கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, வட​​கிழக்கு மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் சீனர்களைப் போலவே இருக்கிறார்கள், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள் என்ற அவரது கருத்து பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து பிட்ரோடா தனது பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது.






      Dinamalar
      Follow us