sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'சமந்தா விவாகரத்தில் பேசியது தப்புதான்' மன்னிப்பு கோரினார் அமைச்சர் சுரேகா

/

'சமந்தா விவாகரத்தில் பேசியது தப்புதான்' மன்னிப்பு கோரினார் அமைச்சர் சுரேகா

'சமந்தா விவாகரத்தில் பேசியது தப்புதான்' மன்னிப்பு கோரினார் அமைச்சர் சுரேகா

'சமந்தா விவாகரத்தில் பேசியது தப்புதான்' மன்னிப்பு கோரினார் அமைச்சர் சுரேகா


ADDED : அக் 03, 2024 11:57 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் தான் காரணம் என கருத்து தெரிவித்ததற்கு, தெலுங்கானா அமைச்சர் சுரேகா மன்னிப்பு கோரினார்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகிப்பவர் கொண்டா சுரேகா.

குற்றச்சாட்டு


இவர், நேற்று முன்தினம் அளித்த பேட்டியின் போது, 'நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே விவகாரத்து ஆனதற்கு, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் தான் காரணம்' என, குற்றஞ்சாட்டினார்.

மேலும், 'ராமாராவ் அமைச்சராக இருந்தபோது, நாக சைதன்யா - சமந்தாவை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கினார். சமந்தாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு, தம்பதியை பிளாக்மெயில் செய்தார்.

'இதன் காரணமாகவே அவர்கள் பிரிந்தனர். இது, இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியும்' என்றார்.

இது, தெலுங்கு சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுன் வெளியிட்ட சமூகவலைதள பதிவு:

அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிரிகளை விமர்சிக்க, அரசியலுக்கு துளியும் தொடர்பில்லாத சினிமா நட்சத்திரங்களை இழுக்காதீர்கள்.

முற்றிலும் தவறு


அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுங்கள். மரியாதைக்குரிய பதவியில் உள்ள நீங்கள், எங்கள் குடும்பம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. உங்கள் கருத்துகளை நீங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா, நாக சைதன்யா தனித்தனியாக அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் சுரேகா நேற்று கூறியதாவது:

பெண்களை இழிவுபடுத்தும் ஒரு அரசியல் தலைவரை கேள்விக்கு உட்படுத்தும் நோக்கத்தில் தான் அந்த கருத்தை தெரிவித்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவை பற்றி பேசும்போது வாய்தவறி அந்த கருத்தை தெரிவித்துவிட்டேன். அது, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புண்படுத்திவிட்டது என்பதை அறிந்து வருந்தினேன்.

எனவே, அந்த கருத்தை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பும் கோருகிறேன்.அதேநேரம், ராமாராவ் குறித்து நான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெறப்போவதில்லை.

இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அமைச்சர் சுரேகா மீது முன்னாள் அமைச்சர் ராமாராவ் அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார். “தெலுங்கானாவில், ஆளும் காங்கிரஸ் அருவருக்கத்தக்க அரசியல் செய்கிறது. காங்., மூத்த தலைவர் ராகுல், அமைச்சர் சுரேகாவை நல்ல மனநல மருத்துவரை நாட அறிவுறுத்த வேண்டும்,” என்றார்.

அமைச்சர் சுரேகாவின் கருத்து அபத்தமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை, ஊடகத் தலைப்புச் செய்திகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது.

நடிகர் நாக சைதன்யா

எங்கள் விவகாரத்து முடிவு பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்டது. இதில், அரசியல் சதி எதுவுமில்லை. உங்கள் அரசியல் சண்டைக்குள் என்னை இழுக்காதீர்கள். என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து விலகி இருங்கள்.

நடிகை சமந்தா






      Dinamalar
      Follow us