முதல்வராக சம்பாய் சோரன் இன்று பதவி ஏற்பு : பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் ‛ கெடு'
முதல்வராக சம்பாய் சோரன் இன்று பதவி ஏற்பு : பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் ‛ கெடு'
ADDED : பிப் 01, 2024 11:48 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பமாக சாம்பாய் சோரன் இன்று முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை நிருபிக்க 10 நாள் அவகாசம் கொடுத்துள்ளார் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோ்ரசா கட்சியின் முதல்ரவாக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார்.நேற்று கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்ததையடுத்து, புதிய முதல்வராக சம்பாய் சோரன் அறிவிக்கப்பட்டார்.
தனக்கு பெரும்பான்மை உள்ளதாக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியிலுடன் நேற்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன் . இதை ஏற்று ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னர்.
இதற்கிடையே ஆட்சி அமைக்க குதிரை பேரம் நடக்க கூடும் என்ற நிலை ஏற்பட்டதால், ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் நேற்று ஆந்திர மாநிலம் ஹைதரபாத் சென்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜார்கண்ட் முதல்வராக சம்பான் சோரன் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிருபிக்க 10 நாள் அவகாசம் அளித்து கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.