தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி மீது பீஹாரில் வழக்கு

சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி மீது பீஹாரில் வழக்கு

சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி மீது பீஹாரில் வழக்கு


ADDED : மார் 12, 2024 04:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 04:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா: சனாதனம் குறித்து விமர்சித்துப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி மீது, பீஹாரில் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

'தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி, மாநில அமைச்சராக உள்ளார். கடந்தாண்டு, செப்.,ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்து அவர் பேசினார். 'டெங்கு, கொசு, மலேரியா போன்றவற்றை தடுக்கக் கூடாது; அவற்றை ஒழிக்க வேண்டும். அதுபோல தான், சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்' என, அவர் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர், குறிப்பாக, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம்,'பேச்சு சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமையை நீங்கள் மீறியுள்ளீர்கள். நீங்கள் ஒரு சாதாரண ஆள் அல்ல. அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களுடைய பேச்சால் என்ன தாக்கம் ஏற்படும் என்பது தெரியுமா' என, உதயநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், பீஹாரின் ஹர்ரா நகர போலீஸ் ஸ்டேசனில் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக உதயநிதி மீது 298 வது சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, கர்நாடகாவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us