சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஏப் 10, 2024 05:41 PM
ADDED : ஏப் 10, 2024 05:33 PM

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி கிராம மக்கள் அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு புகார்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி கிராமம் உள்ளது. ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பல்வேறு தரப்பு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி கிராம மக்கள் அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு புகார்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ‛‛நீதிமன்றம் முழு விஷயத்தையும் உன்னிப்பாகக் கண்காணிக்கும். கிராம மக்களுக்கு தேவையான நிதி அரசால் வழங்கப்படும்' என நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

