ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
UPDATED : டிச 09, 2024 08:19 PM
ADDED : டிச 09, 2024 05:45 PM

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டார். 2021ல் அவருக்கு மூன்றாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு மீண்டும் ஒரு முறை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு இருந்தது. சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் நாளை நிறைவு பெறும் நிலையில், புதிய கவர்னர் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரிசர்வ் வங்கியின் 26 வது கவர்னராக பொறுப்பேற்கிறார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, 1990 ராஜஸ்தான் பேட்சை சேர்ந்தவர். அவர், தற்போது நிதித்துறையில் வருவாய் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் ரிசர்வ் வங்கியில் 3 ஆண்டுகாலம் பணியாற்றுவார்.