ADDED : ஜன 30, 2025 11:48 PM

ராய்ச்சூர்; அரசு கல்லுாரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர், போலீசில் சரண் அடைந்தார்.
ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் அரசு கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்து வந்தவர் ஷிபா, 24. நேற்று காலை லிங்கசுகூரில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் கல்லுாரிக்கு வந்தார். அப்போது அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த நபர், மாணவியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்தார்.
மாணவியும் கல்லுாரிக்கு செல்லாமல், அந்த வாலிபருடன் அருகில் உள்ள லே - அவுட்டிற்கு சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென அந்நபர், இளம்பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில், மாணவி அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதை பார்த்த அப்பகுதியினர், லிங்கசுகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாருடன், டி.எஸ்.பி., தல்வார் வந்தார். அதற்குள் மாணவியை கொலை செய்தவர், தானாகவே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரது பெயர் முபின், 28, என தெரியவந்துள்ளது. எதற்காக மாணவியை கொலை செய்தார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

