ADDED : ஜன 18, 2024 03:11 AM

சத்ய சாய்பாபாவின் ஜென்ம பூமியில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தேசிய அகாடமி திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்க டில்லியில் இருந்து விமானம் மூலம், ஸ்ரீசத்ய சாய் விமான நிலையத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அவரை, ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்டின் அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் வரவேற்றார். அவரை பார்த்து உற்சாகம் அடைந்த பிரதமர் மோடி, “சாய்ராம் ரத்னாகர், எப்படி இருக்கீங்க?” என்று கேட்டார்.
அதன்பின்னர் புட்டபர்த்தி உடனான தனது தொடர்பை, பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். “ஆன்மிகம், தேசத்தின் நலனில் உத்வேகத்துடன் செயல்பட்டவர் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா,” என, புகழாரம் சூட்டினார். “ஸ்ரீசத்ய சாயின் ஜென்ம பூமியில் இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என, நெகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர், அங்கிருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ள, பாலசமுத்திரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
- நமது நிருபர் -