
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் பிரதமரான நேரு துவங்கி இந்திரா, ராஜிவ், மன்மோகன் சிங் வரை நாட்டில் வறுமையை ஒழிப்பதில் தோல்வி அடைந்தனர். பிரதமர் மோடி வந்த பின் ஏழைகளின் துயரம் குறைந்துள்ளது. அவர்களின் ரட்சகராக மோடி உள்ளார்.
ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,
தெற்கிலும் முந்துவோம்!
தென் மாநிலங்களில் வெற்றி உறுதி. வட மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் என்கிறது காங்கிரஸ். ஆனால், தென் மாநிலங்களில் காங்கிரசை பா.ஜ., முந்தும். வட மாநிலங்களில் வெற்றியை தக்கவைப்போம்.
நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
பழங்குடி முதல்வருக்கு அநீதி!
அதானி மற்றும் அம்பானியின் கருப்பு பணம் அவர்களின் டெம்போக்களில் சுதந்திரமாக வலம் வருகிறது. அதை கண்டுகொள்ளாத பிரதமர், ஜார்க்கண்டில் பழங்குடியின அரசியல் தலைவரை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்

