மோசடியாளர் என அறிவித்த எஸ்.பி.ஐ., ;அனில் அம்பானி நிறுவனங்களில் ரெய்டு
மோசடியாளர் என அறிவித்த எஸ்.பி.ஐ., ;அனில் அம்பானி நிறுவனங்களில் ரெய்டு
ADDED : ஜூலை 24, 2025 12:51 PM

புதுடில்லி: டில்லி மற்றும் மும்பையில் உள்ள தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசனையும் மோசடியாளர் என்று எஸ்.பி.ஐ., அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
மோசடியாளர் என அறிவிக்கக் காரணம்?
பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், சட்டவிரோதமாக நிதி ஆதாயம் பெற்றிருந்தது. இப்படி பட்ட சூழலில், யெஸ் வங்கியிடம் அனில் அம்பானி ரூ.12 ஆயிரத்து 800 கோடி கடன் பெற்றுள்ளார்.எனவே, இத தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்த்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் 13ம் தேதி அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை, எஸ்.பி.ஐ., மோசடியாளர் என பட்டியலிட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.31,580 கோடி கடன் பெற்றுள்ளது. இதில், 44 சதவீதத்தை, அதாவது ரு.13,667 கோடி, ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.12,692 கோடியை துணை நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளது.
இதுவரையில் வாங்கிய ரூ.41,863 கோடி கடன் தொகையில், ரூ.28,421 கோடியின் பயன்பாடு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தையும், அனில் அம்பானியையும் மோசடியாளர் என்று எஸ்.பி.ஐ., வகைப்படுத்தியுள்ளது.