தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மதம் மாறினால் எஸ்.சி., - எஸ்.டி., அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதம் மாறினால் எஸ்.சி., - எஸ்.டி., அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதம் மாறினால் எஸ்.சி., - எஸ்.டி., அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


ADDED : மார் 25, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-டில்லி சிறப்பு நிருபர்-
'ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தை தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, போதகராக பணியாற்றி வருகிறார். ஜாதி ரீதியில் துன்புறுத்துவதாக கூறி, ராமிரெட்டி என்பவர் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிநாத், 'ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால், சின்தடா ஆனந்த், பட்டியலின அந்தஸ்தை இழந்து விட்டார்.

' எனவே, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் பாதுகாப்பு கோர முடியாது' என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார். ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆனந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவு: ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்தம் தவிர, பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது. வேறு மதத்திற்கு மாறும்போது, அதுவரை அனுபவித்து வந்த பட்டியலின அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர்.கடந்த, 1950ல் பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவில், இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, மாற்று மதம் மாறியவர்கள், பட்டியலினத்தவர்களாக கருதப்பட மாட்டார்கள்.

பிறப்பால் பெற்ற பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர் என விளக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் பிற மதத்தை பின்பற்றும் அதே சமயத்தில், பட்டியலின சலுகைகளையும் கோர முடியாது. அந்தஸ்து ரத்தாவதால், அரசியல் சாசனத்தின் கீழ் பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் எந்த சலுகையையும் அவர் அனுபவிக்க முடியாது. அந்த வகையில், கிறிஸ்துவராக மதம் மாறிய சின்தடா ஆனந்த் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கும்படி கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us