ADDED : பிப் 17, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா : ஷிவமொகாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஷிவமொகா மாவட்டம், பத்ராவதியில் உள்ள ஸ்போர்டி இன்டர்நேஷனல் பள்ளி. இப்பள்ளி பஸ், நேற்று காலை 20க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. பத்ராவதி பைபாஸ் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இதை பார்த்த அப்பகுதியினர், விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் 20 படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.