ADDED : ஆக 15, 2011 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலாப்பூர் (மகா.,): பள்ளி அனுமதியின்றி கால்பந்து போட்டிகளில்பங்கேற்க சென்ற 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் அடைத்து வைத்து தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் பள்ளிக் குழந்தைகளை பள்ளியில் உள்ள அறை ஒன்றில்அடைக்கபட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆப்சென்ட் அளித்தும் வகுப்புகளில் கலந்து கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது பற்றி தகவல்அறிந்த மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவின்கட்சி யினர் பள்ளிக்குழந்தைகளை மீட்டுள்ளனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்நிலையில் பள்ளி முதல்வர் ராபர்ட் தாஸ் நடந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். கல்வித்துறை அதிகாரி பாட்டீல் இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.