ADDED : அக் 05, 2024 05:16 AM

மைசூரு: பெண்கள், குழந்தைகள் நலத்துறை சார்பில் நேற்று குழந்தைகள் தசராவை, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா துவக்கி வைத்தார்.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலாசாரம், பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றனர். அரண்மனை கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில் முன்பிருந்து புறப்பட்ட ஊர்வலம், தேவராஜ் அர்ஸ் சாலை வழியாக சென்று மஹாராஜா அரசு பள்ளியில் நிறைவடைந்தது.
குறிப்பாக, மாணவ - மாணவியர், சாமுண்டி, துர்கை பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடினர். புலி நடனம், கொம்பே நடனம், யக் ஷ கானா, நாட்டுப்புற நடனம், கன்சாலே, டோலு குனிதா, பாட்டு உட்பட கலைத்திறன்கள் பாராட்டப்பட்டன.
மாநிலத்தின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஆடைகளை அணிந்து மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சிவராம்பூர் அரசு துவக்கப் பள்ளி, மைசூரு வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.
5_DMR_0002, 5_DMR_0003
நவராத்திரியை குறிக்கும் வகையில், ஒன்பது அம்மன் வேடமணிந்து பங்கேற்ற மாணவிர். (அடுத்த படம்) மாணவர்களின் டொள்ளு குனிதா நடனம்.