வடமாநிலங்களை வாட்டும் பனி உ.பி.யில் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
வடமாநிலங்களை வாட்டும் பனி உ.பி.யில் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஜன 02, 2026 04:17 PM

லக்னோ: வடமாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. குளிர் அதிகமாகி கொண்டே வருவதால் உத்தரபிரதேசத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜன.5 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில், டில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சீதோஷ்ண நிலை மாறியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது.
அதிகாலை தருணங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் சுணக்கம் காணப்பட்டது. இந் நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உ..பி.யில் அனைத்து பள்ளிகளும் ஜன.5ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தலைநகர் டில்லியில் முன்னே வருபவர்கள் யார் என்று தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு ஜன. 15 வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

