பயங்கரவாதி முதல் போட்டோ ரிலீஸ்; தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதி முதல் போட்டோ ரிலீஸ்; தேடுதல் வேட்டை தீவிரம்
UPDATED : ஏப் 23, 2025 12:11 PM
ADDED : ஏப் 23, 2025 09:04 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியானது. போட்டோவில்
துப்பாக்கியுடன் பயங்கரவாதி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. பைஸ்ரான், பஹல்காம், அனந்த் நாக் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பைஸ்ரான், பஹல்காம், அனந்த்நாக் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய்கள், ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ''பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க, நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் உடல்களை மீட்ட மருத்துவ குழுக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளன'' என ராணுவம் தெரிவித்துள்ளது.
நம்பர் பிளேட் இல்லாத பைக் ஒன்று ஸ்ரீநகரில் சிக்கியது என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டில்லியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தினர்.
பயங்கரவாதி முதல் போட்டோ ரிலீஸ்!
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியானது. போட்டோவில் துப்பாக்கியுடன் பயங்கரவாதி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
உள்ளூர் வாசி போல உடை அணிந்து பயங்கரவாதி வந்துள்ளான். போலீஸ், ராணுவ வீரர்கள் உடையிலும் சில பயங்கரவாதிகள் வந்தனர். பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.