இரண்டாம் கட்ட தேர்தல் : வாக்காளர்களுக்கு மோடி நன்றி
இரண்டாம் கட்ட தேர்தல் : வாக்காளர்களுக்கு மோடி நன்றி
UPDATED : ஏப் 26, 2024 08:33 PM
ADDED : ஏப் 26, 2024 07:53 PM

புதுடில்லி: இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் கடந்த 19ம் தேதியன்று 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி, இன்று வாக்களித்த முதன்முறை வாக்காளர்கள் இந்தியா முழுதும் தே.ஜ., கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிகறது என ‛ எக்ஸ்'தளத்தில் பதிவேற்றினார்.
இந்நிலையில் இன்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக பிரதமர் மோடி தனது ‛எக்ஸ் ' வலைதளத்தில் கூறியுள்ளது.
இரண்டாம் கட்ட ஒட்டுப்பதிவு மிகவும் நன்றாக இருந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி. பா.ஜ., தலைமையில் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். மேலும் தே.ஜ. கூட்டணியை இளைஞர்கள், பெண்கள் வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் கூறியுள்ளார்.

