sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது

/

ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது

ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது

ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது

14


ADDED : அக் 30, 2024 01:48 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:48 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : போதைப் பொருள் தயாரித்து, நாடெங்கும் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆலை, டில்லி அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொழிலதிபர், திஹார் சிறை வார்டன், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டில்லிக்கு அருகே, உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் காஸ்னா தொழிற்பேட்டை பகுதியில் போதைப் பொருள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருவதாக, போதைப் பொருள் கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் கிடைத்தது.

டில்லி போலீசின் சிறப்பு பிரிவினருடன் இணைந்து, போதைப் பொருள் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

' மெத் ஆம்பெட்டமைன் '


அப்போது, அங்குள்ள ஒரு தொழிற்சாலையில், 'லேப்' எனப்படும் ஆய்வகம் அமைத்து, 'மெத் ஆம்பெட்டமைன்' எனும் போதைப் பொருள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, அந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், டில்லி திஹார் சிறையின் ஜெயிலர் ஒருவர், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ஆலையில் போதைப் பொருள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, 95 கிலோ எடையுள்ள மெத் ஆம்பெட்டமைன் எனும் செயற்கை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தவிர, போதைப் பொருள் தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்வேறு பொருட்களை கலந்து இது போன்ற போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.

இந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், ஏற்கனவே போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மெக்சிகோ நபர்


அப்போது, அங்கிருந்த சிறை வார்டன் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நண்பர்களாக பழகினர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், வார்டனுடன் இணைந்து போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார்.

இதற்காக, மும்பையில் இருந்து மருந்து தயாரிக்கும் பயிற்சி பெற்ற ஒருவரை தங்களுடன் இவர்கள் சேர்த்துக் கொண்டனர். மேலும் சிலரும் இதில் இணைந்தனர்.

சோதனையின்போது, தொழிலதிபர், வார்டன் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் இருந்தனர். இதை தவிர, மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆலையில் தயாரிக்கப்படும் போதைப் பொருளின் தரத்தை, அந்த மெக்சிகோ நாட்டவர் பரிசோதித்து உறுதி செய்து வந்தது தெரியவந்தது. மெக்சிகோ, போதைப் பொருள் கடத்தலுக்கு புகழ்பெற்றது.

அந்த நாட்டில் பல போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றான, சி.ஜே.என்.ஜி., என்றழைக்கப்படும், 'கார்டெல் டி ஜாலிஸ்கோ நுாவா ஜெனரேஷியன்' என்ற அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் இருந்து இந்த போதைப் பொருள் தயாரிப்பில், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறதா என்பது தொடர்பாகவும், அதில் நடக்கும் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை வரை

இந்தாண்டில் மட்டும் இது போன்று போதைப் பொருள் தயாரிக்கும் ஆலைகள் கண்டுபிடிக்கப்படுவது இது ஆறாவது சம்பவம். குஜராத்தின் காந்திநகர், அம்ரேலி, ராஜஸ்தானின் ஜோத்பூர், சிரோஹி, மத்திய பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் இயங்கிய ஐந்து தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.போபாலில் மட்டும், 907 கிலோ போதைப் பொருள், 7,000 கிலோ ரசாயனங்கள், இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.சமீபத்தில் சென்னையில் வீட்டில் லேப் அமைத்து, போதைப் பொருள் தயாரித்ததாக ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இன்ஜினியரிங் மற்றும் வேதியியல் பட்டப் படிப்பு படித்துள்ள அந்த இளைஞர்களிடம் இருந்து, 245 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த ஆறு தொழிற்சாலைகள், சென்னை இளைஞர்கள் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், இங்குள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படுகிறது.



செலவு குறைவு

இந்த செயற்கை போதைப் பொருள் தயாரிப்பதற்கு மிகவும் குறைந்த அளவே செலவாகிறது. மேலும், தொழிற்சாலை என்ற பெயரில் இதை நடத்தும்போது, யாருக்கும் எந்த சந்தேகமும் எழாது என்பது இவர்களுடைய நம்பிக்கை. ஆலைகளில் ஆய்வுகள் அடிக்கடி நடக்காததும் இவர்களுக்கு சாதகமாக உள்ளது.மேலும், இந்த ஆலைகளில் இருந்து உருவாகும் கழிவுகள், மிகவும் நச்சுத்தன்மை உள்ளவை. அவற்றை முறையாக கையாளாவிட்டால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மெக்சிகோவில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால், நம் நாட்டில் இருந்து தயாரிக்கும் முயற்சியில், போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் ஈடுபடலாம் என்ற சந்தேகமும் உள்ளது.இதனால், தொழிற்சாலைகள் செயல்படும் பகுதிகளில் இது போன்ற போதைப் பொருள் தயாரிப்பு ஆலைகள் மறைமுகமாக அதிக அளவில் இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.








      Dinamalar
      Follow us