'ரீ என்ட்ரி'யால் கலக்கம்!
'வந்துட்டேன் சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்ற வசனத்திற்கு ஏற்ப, கடலோர மாவட்ட தாமரை கட்சி எம்.பி., தீவிர அரசியலுக்கு, 'ரீ என்ட்ரி' கொடுத்து இருக்காரு. அதுவும் மசூதிகளை இடிப்போம்னு, சர்ச்சை கருத்தோட. இவரு கடந்த நாலு வருஷமா, அரசியல்ல தீவிரமா ஈடுபடல. லோக்சபா தேர்தல்ல மறுபடியும் 'சீட்' வாங்க முயற்சி பண்ணுறாரு.
இவரு தீவிர அரசியல்ல இருந்து, ஒதுங்கி இருந்த அப்போ, முன்னாள் சபாநாயகரும், முன்னாள் பெண் எம்.எல்.ஏ.,வும், 'சீட்' பெற முயற்சி பண்ணிட்டு வந்தாங்க. இப்போ எம்.பி.,யோட, ரீ என்ட்ரியால கலக்கம் அடைஞ்சி இருக்காங்க.
மவுனம் சாதிக்கும் அமைச்சர்!
வர மிளகாய் அதிகம் விளையுற மாவட்டத்துல, சிறுபான்மை சமூக பெண் ஒருத்தங்கள, அவங்க சமூக வாலிபர்களே பலாத்காரம் பண்ணி இருக்காங்க. ஆனா, இந்த விஷயத்துல அரசு சார்புல, யாரும் வாயவே திறக்கல. பெண்கள் நலத்துறை அமைச்சரும், இந்த சம்பவத்த பத்தி எங்கயும் பேசாம, மவுனம் சாதிச்சிட்டு வர்றாரு. தப்பு செஞ்ச வாலிபர்கள பத்தி ஏதாவது பேசுனா, அந்த சமூகத்தோட ஓட்டு கிடைக்காம போயிருமோன்னு, கை கட்சிக்காரங்க பயப்படுறாங்களாம். ஒரு பெண்ணோட மானத்தோட, ஓட்டு தான் முக்கியமா போச்சு போல கைகட்சிகாரங்களுக்கு.
குமாரசாமியின் தயக்கம்!
பெங்களூரு ரூரல் தொகுதியில, ஒக்கலிக சமூக ஓட்டு அதிகமாக இருக்குறதால, இந்த தொகுதியில இருந்து போட்டியிட்டா, ஈசியாக ஜெயிச்சரலாம்னு, புல்லுக்கட்டு தலைவரு குமரண்ணரை, கட்சிக்காரங்க உசுப்பேத்தி விடுறாங்களாம். ஆனா இந்த தொகுதி எம்.பி.,யாக இருக்குறவரு, துணை முதல்வரு சிவாவோட தம்பி. அண்ணன், தம்பிக்கு தொகுதியில நிறைய செல்வாக்கு இருக்கு. இதனால பெங்களூரு ரூரலுக்கு வர, குமரண்ணரு தயக்கம் காட்டுறாராம். கட்சிக்காரங்க பேச்ச கேட்டு, ஆழத்துல கால விட்டுட்டு முழிக்க கூடாதுன்னு, அலர்ட்டா இருக்காராம்.