வாயை அடைக்க முடியுமா?
உருளை மாவட்டத்துல தொட்டகவுடர் குடும்பத்துக்காரங்க வைச்சது தான் சட்டம். நம்ம எதிர்த்து யாரும் பேச மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனா அந்த மாவட்ட தாமரை கட்சி வக்கீல் ஒருத்தரு, தொட்டகவுடரு குடும்பத்துக்கு தலைவலியா மாறி இருக்காரு.
தொட்டகவுடரோட மூத்த புள்ள, பேரன அரசியல விட்டு ஓட விடுவேன்னு, சபதம் எடுத்து வேலை செஞ்சிட்டு வர்றாரு. சாதாரண ஆளா இருந்தா கூட, மிரட்டி, உருட்டி ரேவண்ணரு வாய அடைச்சுடுவாரு. ஆனா எதிர்த்து நிற்குறது வக்கீல் ஆச்சே. அவரு வாய அடைக்க முடியுமா. என்ன பண்ணுறதுன்னு தெரியாம, முழிச்சிட்டு வர்றாங்க.
மேலிடத்தில் பேச்சு எடுபடாது!
சட்டசபை தேர்தல்ல போட்டியிட்ட, இரண்டு தொகுதியிலயும் தோத்து போன, மூத்த தலைவரு ஒருத்தரு, தாமரை கட்சியில இருக்காரு. நான் தோத்து போனதற்கு கட்சிக்காரங்க தான் காரணம். இல்லன்னா பெரிசா சாதிச்சு இருப்பன்னு, வீரவசனம் பேசிட்டு வர்றாரு. டில்லிக்கு போய் மேலிடத்துல, தனக்கு எதிராக செயல்படுவறங்கள பத்தி, வத்தி வைக்க போறாராம். இவரு இனி டில்லிக்கு போனா என்ன, போகலன்னா என்னா. அவர் பேச்சு எல்லாம் மேலிடத்துல எடுபடாதுன்னு, இங்கு இருக்குற தலைக்கட்டுகள் மிதப்புல இருக்காங்களாம்.
கை எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்ப்பு!
இப்போ வருமோ, எப்போ வருமோன்னு, வாரிய தலைவர் பட்டியலை மேலிடம் எப்போ வெளியிடும்னு, கை கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்களாம். சங்கராந்திக்குள்ள பதவி கிடைச்சுரும். அரசு கார்ல ஜம்முன்னு, பந்தாவா போகலாம்னு, கனவு கண்டுகிட்டு இருக்காங்க. ஏற்கனவே நிறைய முறை ஏமாந்து போயிட்டாங்க. இந்த முறை கண்டிப்பாக பட்டியல் வெளியாகும்னு, ஆதரவாளர்கள் கிட்ட சொல்லிட்டு வர்றாங்களாம். முதல்வர், துணை முதல்வர், கட்சி மேலிடம் இவங்கள ஏமாத்தாம இருந்தா சரி தான்.