தொட்டகவுடர் கவலை!
வரும் லோக்சபா தேர்தல்ல தாமரை கட்சி கூட, புல்லுக்கட்டுக்காரங்க கூட்டணி வைச்சி இருக்காங்க. உருளை மாவட்ட தலைநகர் தொகுதியில, தொட்டகவுடரோட மூத்த புள்ள மகன், மறுபடியும் போட்டியிட ரெடியா இருக்காரு.
ஆனா அவரு நின்னா ஆதரவு தர மாட்டோம்னு, தாமரை கட்சிக்காரங்க சொல்லிட்டு வர்றாங்க. கூட்டணி நல்லா போகுதுன்னு, தொட்டகவுடரும், குமரண்ணரும் நினைச்சிட்டு இருக்குற நேரத்துல, புது பிரச்னை உருவெடுத்து இருக்கு. பேரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்குறவங்களால, தொட்டகவுடர் கவலையில இருக்குறாராம்.
தீயா வேலை செய்யும் இளசுகள்!
கர்நாடகாவுல தாமரை கட்சி மாவட்ட தலைவர்கள, மாற்ற போறாங்க. இத பத்தி மாநில தலைவரே சொல்லி இருக்காரு. இதனால தலைவரு பதவிய பிடிக்க, ஒவ்வொரு மாவட்டத்துலயும், தாமரை கட்சிக்காரங்க இடையில போட்டி ஏற்பட்டு இருக்காம்.
எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள வைச்சு ஒவ்வொருத்தரும் 'மூவ்' பண்ணிட்டு வர்றாங்களாம். ஆனாலும் இரவு, பகல் பார்க்காம கட்சிக்காக உழைக்குறவங்களுக்கே, பதவி கொடுக்க மாநில தலைவரு முடிவு பண்ணி இருக்காராம். இதனால கட்சியில இருக்குற இளசுகள், தீயா வேலை செஞ்சிட்டு வர்றாங்களாம்.
முன்னாள் அமைச்சரால் சர்ச்சை!
ராமாயணத்துல ராமருக்கு உதவுன ஆஞ்சநேயர் பெயர் கொண்ட, முன்னாள் அமைச்சரு ஒருத்தரு கை கட்சியில இருக்குறாரு. வாய வைச்சிட்டு சும்மா இருக்காம, முதல்வர் சித்து தான் எங்களோட ராமர்னு, கொளுத்தி போட்டாரு.
இத தாமரை கட்சிக்காரங்க கெட்டியா பிடிச்சிகிட்டாங்க. முன்னாள் அமைச்சரு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டு வர்றாங்க. முதல்வரையும் விமர்சனம் செய்யுறாங்க. பதிலுக்கு கை கட்சிகாரங்க, தாமரை கட்சிக்காரங்கள விமர்சிச்சிட்டு வர்றாங்க. இதனால சர்ச்சை கிளம்பி இருக்கு. இரு கட்சிக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கு.