மறுபடியும் களம் இறக்க முடிவு!
கோட்டை நகர மாவட்ட தலைநகரு தொகுதி, எம்.பி.,யாக இருக்குறவரு தாமரை கட்சிக்காரரு. மத்திய நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும் இருக்காரு. பெங்களூரு ரூரல் மாவட்டத்துக்காரரான அவர, கடந்த தேர்தல்ல கோட்டை மாவட்டத்துல நிறுத்தி, வெற்றி பெற வைச்சாங்க.
இப்போ இருக்குற அரசியல் எனக்கு சரிப்படாதுன்னு, கடந்த சில மாசத்துக்கு முன்னாடி, மத்திய அமைச்சரு சொல்லி இருந்தாரு. இதனால லோக்சபா தேர்தல்ல அவரு மறுபடியும் நிற்குறது டவுட்னு கட்சியில பேசிக்கிட்டாங்க. ஆனாலும் அவர மறுபடியும் களம் இறக்க, தாமரை மேலிடம் முடிவு பண்ணி இருக்காம்.
அமைச்சருக்கு பயம்!
லோக்சபா தேர்தல்ல, பெங்களூரு மத்திய தொகுதியில ஜெயிக்கணும்னு, கைகட்சிக்காரங்க ஒத்த கால்ல நின்னுட்டு வர்றாங்க. ஆனா, கை கட்சிக்கு இதுவரைக்கும் சரியான வேட்பாளரு கிடைக்கலையாம். இதனால, மின்சார அமைச்சர அந்த தொகுதியில, களம் இறக்கும்படி மேலிடம் உத்தரவு போட்டு இருக்காம்.
ஆனா, அமைச்சருக்கு துளியும் விருப்பம் இல்லை. தாமரை கட்சி கோட்டையில, கைய விட்டு கரண்டுல அடிபட வேண்டாம்னு, மின்சார அமைச்சரு பயந்துட்டு இருக்காராம். ஆனா முதல்வரோ, அமைச்சர் கிட்ட பயப்படாதீங்க. நாங்க இருக்கோம்னு தெம்பு அளிச்சிட்டு வர்றாராம்.
குமரண்ணர் ஆதரவாளருக்கு வலை?
புல்லுக்கட்டு கட்சி தலைவரு தொட்டகவுடரு, குமரண்ணரோட நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட, முன்னாள் அமைச்சரு ஒருத்தர, கடந்த சில நாட்களாக புல்லுக்கட்டு கட்சியில பார்க்க முடியுறது இல்ல. தொட்டகவுடர் குடும்பத்து மேல அவரு, ஏதோ அதிருப்தியில இருக்குறதா சிலர் சொல்லிட்டு வர்றாங்க.
அந்த முன்னாள் அமைச்சரு, தற்போதைய வன அமைச்சரோட சொந்த மாவட்டத்துக்காரரு. இதனால, வன அமைச்சரு மூலமா, முன்னாள் அமைச்சரு கை கட்சி வலை விரிச்சு இருக்குறதா பேச்சு அடிபடுது. முன்னாள் அமைச்சர், 'ஓகே' சொல்லிட்டார்னா, அவர துாக்கிட்டு வர ஒரு கும்பல் ரெடியா இருக்கு.