அமெரிக்க துணை அதிபர் வருகை ஆக்ராவில் பாதுகாப்பு அதிகரிப்பு
அமெரிக்க துணை அதிபர் வருகை ஆக்ராவில் பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : ஏப் 23, 2025 01:41 AM
ஆக்ரா:அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், வருவதை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தன் குடும்பத்துடன் நான்கு நாள் பயணமாக நம் நாட்டுக்கு நேற்று முன் தினம் வந்தார். டில்லி மாநகரில் உள்ள தொன்மை வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்த்தனர்.
உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை பார்வையிட ஆக்ரா நகருக்கு வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று வருகின்றனர்.
அதை முன்னிட்டு, ஆக்ரா நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆக்ரா மாநகர துணைக் கமிஷனர் சோனம் குமார் கூறுகையில், “அமெரிக்க துணை அதிபர் வருகையை முன்னிட்டு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, தொல்பொருள் துறை, விமானப்படை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஆக்ரா முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், இடம்பெறும் கலைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுவர்,”என்றார்.

