தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பாதுகாப்பு படையினர் அதிரடி: மூன்று நக்சல்கள் சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் அதிரடி: மூன்று நக்சல்கள் சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் அதிரடி: மூன்று நக்சல்கள் சுட்டுக்கொலை


ADDED : ஏப் 13, 2025 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிஜாப்பூர்: சத்தீஸ்கரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தர் மண்டலத்துக்கு உட்பட்ட பிஜாப்பூர் மாவட்ட எல்லை வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது இந்திராவதி தேசிய பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலியான நக்சல்கள் குறித்து விபரம் தெரியவில்லை.

சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சத்தீஸ்கரில், நடப்பாண்டில் மட்டும் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 138 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில், பஸ்தர் மண்டலத்தில் மட்டும், 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நேற்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். சி.ஆர்.பி.எப்., வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, தாக்குதல் நடந்த பகுதிக்கு கூடுதல் படையினர் விரைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us