ADDED : அக் 18, 2024 07:35 AM
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி சட்டம் - ஒழுங்கு டி.சி.பி., மஹானிங்க நந்தகாவி, நேற்று அளித்த பேட்டி:
மும்பையில் இருந்து வரும் தனியார் பஸ்சில், ஒருவர் சட்டவிரோதமாக தங்கநகைகள் கொண்டு செல்வதாக, எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே தார்வாடின் எஸ்.டி.எம்., மருத்துவமனை அருகில், இன்று (நேற்று) காலை தனியார் பஸ்கள் சோதனையிடப்பட்டன.
பஸ் ஒன்றில் அபிஷேக் என்பவர் வைத்திருந்த பைகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 1.5 கிலோ தங்க நகைகள், 1.10 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன.
இவற்றுக்கு சரியான ஆவணங்கள் இல்லை. மும்பையில் இருந்து, ஹூப்பள்ளியின் சில நகைக் கடைகளுக்கு பில்கள் மற்றும் ஜி.எஸ்.டி., இல்லாமல் வினியோகிக்கும் நோக்கில் கொண்டு சென்றது விசாரணையில் தெரிந்தது.
கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் அபிஷேக்கை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.