sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சுயசார்பா; அமெரிக்க சார்பா? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

/

 சுயசார்பா; அமெரிக்க சார்பா? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

 சுயசார்பா; அமெரிக்க சார்பா? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

 சுயசார்பா; அமெரிக்க சார்பா? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

2


ADDED : பிப் 17, 2026 03:21 AM

Google News

2

ADDED : பிப் 17, 2026 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்து விட்டு, 'மத்தியில் உள்ளது பலமான அரசா அல்லது பலவீனமான அரசா' என்ற சந்தேகம் மக்களுக்கு வந்து விட்டது.

''இதனால், சுயசார்பு இந்தியாவா; அமெரிக்க சார்பு இந்தியாவா என்ற கேள்வி எழுந்துள்ளது,'' என, காங்., - எம்.பி., ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று, காங்., - எம்.பி.,யும், அக்கட் சியின் செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம், நம் நாட்டின் விவசாயிகள், நில உரிமையாளர்கள் நலன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இயற்கை வளம் அமெரிக்காவிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்காவிடம் இருந்து, 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அந்நாட்டு பொருட்களை இந்தியா வாங்க வேண்டுமென இந்த ஒப்பந்தம் கூறுகிறது. அப்படியானால், இதை இந்தியாவின் நலனுக்கான ஒப்பந்தம் என, எப்படி கூற முடியும்?

நம் நாட்டின் மிக முக்கிய பொக்கிஷமாக கருதப்படும், 'டேட்டா ஷேரிங்' எனப்படும் தரவுகள் பகிர்வு சார்ந்த விஷயங்களில், மத்திய அரசு சமரசம் செய்துள்ளது. தங்களை பலமான அரசு எனக் கூறிக் கொள்கின்றனர்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை பார்த்த பின், மத்தியில் உள்ளது பலமான அரசா அல்லது பலவீனமான அரசா என, மக்கள் கேட்கின்றனர். இதனால் இந்த ஒப்பந்தம், சுயசார்பு இந்தியாவா; அமெரிக்க சார்பு இந்தியாவா கேள்வியை எழுப்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -:






      Dinamalar
      Follow us