பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஆக 06, 2024 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி(96). டில்லியில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், இன்று டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் அத்வானி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.