ADDED : ஜூன் 07, 2025 09:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்; கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தென்னலா பாலகிருஷ்ண பிள்ளை, 95, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இவரது உடல், திருவனந்தபுரம் நெட்டயத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பாலகிருஷ்ண பிள்ளை, கேரள மாநில காங்., தலைவராக 1998 - 2001 மற்றும் 2004 - 2005 என இருமுறை பதவி வகித்துள்ளார். 60 ஆண்டுகள் பொதுவாழ்வில், இருமுறை அடூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். மேலும் மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பணியாற்றினார்.
இவரது மறைவுக்கு, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.