பெண் வழக்கறிஞர் பலாத்காரம் சீனியருக்கு ஒரு வாரம் அவகாசம்
பெண் வழக்கறிஞர் பலாத்காரம் சீனியருக்கு ஒரு வாரம் அவகாசம்
ADDED : நவ 14, 2025 12:19 AM
இந்தியா கேட்:பெண் வழக்கறிஞர் தொடர்ந்த பலாத்கார வழக்கில் வழக்கறிஞர் சரணடைய 17ம் தேதி வரை அவகாசம் அளித்து டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டில்லியை சேர்ந்த 27 வயதான பெண் வழக்கறிஞர், ஒரு நண்பர் மூலம் 51 வயதான மூத்த வழக்கறிஞரை அவரது வீட்டில் ஒரு விருந்தில் சந்தித்தார். அங்கு அவரை மூத்த வழக்கறிஞர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கணவர் இறந்துவிட்டதால், பெண் வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். பின், அவரை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
மேல்முறையீடு இதனால் கடந்த மே மாதத்தில் பெண் வழக்கறிஞர் கருவுற்றார். அவரை திருமணம் செய்து கொள்ள மூத்த வழக்கறிஞர் மறுத்தார்.
இதனால் அவர் மீது போலீசில் பெண் வழக்கறிஞர் பலாத்கார புகார் அளித்தார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஜாமின் பெற்றார். இதையடுத்து, நீதித்துறையின் சில அதிகாரிகள், பெண் வழக்கறிஞரை சந்தித்து, புகாரை வாபஸ் பெறும்படியும், வாக்குமூலத்தை மாற்றிக் கூறும்படியும் நிர்பந்தம் செய்தனர்.
இதை பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞரின் ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
நடவடிக்கை இந்த விவகாரத்தில் நீதித்துறையின் அதிகாரிகளின் தலையீடு இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி அமித் மகாஜன், விசாரணை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சரணடைவதற்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தார்.
அதுவரை பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளவும் தடை விதித்தார். ஒருவேளை தொடர்பு கொண்டால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

