1,062 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
1,062 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
ADDED : மே 09, 2024 04:02 PM

மும்பை: இன்றைய (மே 9) வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1062 புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளுடன் வர்த்தகமானது.
இந்த வாரம் துவங்கியது முதல் பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்று (மே 9) மீண்டும் மேலும் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளுடன் வர்த்தகமானது. அதேபோல், நிப்டி 348 புள்ளிகள் வரை சரிந்து 21,954 புள்ளிகளில் வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகும் வரை இப்படிதான் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் ஜூன் 4 தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை மீண்டும் உச்சம் தொடலாம்.