வரலாற்று உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்: 78 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
வரலாற்று உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்: 78 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
ADDED : ஜூன் 25, 2024 03:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: வரலாறு காணாத அளவில், 78 ஆயிரம் புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டது.
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று (ஜூன் 25) இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. மாலை 3:15 மணி நிலவரப்படி 769 புள்ளிகள் அதிகரித்து 78,110.96 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 181 புள்ளிகள் உயர்ந்து 23,731.60 ஆக வர்த்தகமானது.
இன்றயை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சிறப்பான லாபத்துடன் இயங்கின. குறிப்பாக, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனங்களின் பங்குகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.