உச்சத்தில் போய் உட்கார்ந்த சென்செக்ஸ்: 84 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
உச்சத்தில் போய் உட்கார்ந்த சென்செக்ஸ்: 84 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
ADDED : செப் 20, 2024 11:26 AM

மும்பை: வரலாறு காணாத அளவில், 84 ஆயிரம் புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டது.
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் இன்று (செப்.,20) இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று வர்த்தக நேர முடிவில் 83,184.8 புள்ளிகளுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இன்று வர்த்தகம் துவங்கியதில் இருந்து உயர்வை நோக்கி சென்றது. காலை 10:50 மணியளவில் 921.69 புள்ளிகள் உயர்ந்து 84,106 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது. இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் ஐடிடி சிமெண்டேஷன் பங்குகள் 17 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோல் ஐசிஐசிஐ பங்குகள் தொடர்ந்து 5 நாட்களாக உயர்வை சந்தித்துள்ளது.
அதேபோல், தேசிய குறியீட்டு எண் நிப்டி நேற்றைய வர்த்தக நேர முடிவில் 25415.8 ஆக இருந்த நிலையில், இன்று காலை 11.25 மணியளவில் 25.701.40 ஆக வர்த்தகமாகின.