sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி... ஒரு மணிநேரத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு

/

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி... ஒரு மணிநேரத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி... ஒரு மணிநேரத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி... ஒரு மணிநேரத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு

13


ADDED : மார் 23, 2026 02:28 PM

Google News

13

ADDED : மார் 23, 2026 02:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிப்டி கடும் சரிவை சந்தித்ததால், வர்த்தகம் துவங்கிய ஒரு மணிநேரத்தில், முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் சுமார் 1,900 புள்ளிகள் சரிந்து 72,628 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 600 புள்ளிகள் சரிந்து 22,504 புள்ளிகளாகவும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால், பங்குச் சந்தை துவங்கிய ஒரே மணிநேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.429 லட்சம் கோடியிலிருந்து ரூ.415 லட்சம் கோடியாகக் குறைந்தது.

மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை சுமார் 90,152 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்று விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்க சில காரணங்களை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, முதலீட்டாளர்களிடையே அதிகரித்த பயம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம், உலகளாவிய சந்தை பாதிப்பு உள்ளிட்டவை சென்செக்ஸ் மற்றும் நிப்டியின் சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us