செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: அமலாக்கத்துறைக்கு பதில் அளிக்க உத்தரவு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: அமலாக்கத்துறைக்கு பதில் அளிக்க உத்தரவு
ADDED : ஏப் 01, 2024 12:59 PM

புதுடில்லி: செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், 30வது முறையாக, ஏப்.,4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில்பாலாஜி தனக்கு ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று(ஏப்ரல் 01) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும். கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

