sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 31, 2026 ,பங்குனி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யணும்; சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

/

செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யணும்; சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யணும்; சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யணும்; சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

11


UPDATED : பிப் 19, 2025 06:07 PM

ADDED : பிப் 19, 2025 05:57 PM

Google News

UPDATED : பிப் 19, 2025 06:07 PM ADDED : பிப் 19, 2025 05:57 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இது தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. ஜாமின் வழங்கிய மறுநாளே, அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் அமைச்சராக இருப்பதால், அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகள், வழக்கில் சாட்சி அளிக்க வர மறுப்பதாக புகார்கள் எழுந்தன. அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பண மோசடியில் பாதிக்கப்பட்ட புகார்தாரர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்' என்று அவரது வக்கீலிடம் தெரிவித்தது.இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us