செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
UPDATED : ஆக 20, 2024 05:22 PM
ADDED : ஆக 20, 2024 03:36 PM

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமின் கேட்டும் உச்சநீதிமன்றத்தை செந்தில்பாலாஜி நாடினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகளையும் விசாரிப்பீர்களா? என்பன உள்ளிட்ட சில கேள்விகளை நீதிமன்றம் எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை தெரிவித்த பதில்களை பதிவு செய்தது. மேலும், போக்குவரத்து துறையில் 2,175 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமலாக்கத்துறை அது குறித்த விளக்கங்களையும் அளித்தது. இதனையும் நீதிமன்றம் பதிவு செய்தது.
இதன் பிறகு ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.