ADDED : மார் 10, 2024 12:28 AM
லக்னோ:“லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சில கட்சிகள் வதந்தி பரப்புகின்றன,” என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. ஆனால், நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சில கட்சிகள் வதந்தி பரப்புகின்றன.
இன்னும் சிலர், மூன்றாவது அணி அமைக்கிறோம் என எங்களைப் பற்றி தவறான தகவலை கூறுகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவதால் எதிர்க்கட்சிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன.
சமூகத்தின் நலன் கருதி, தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் பகுஜன் சமாஜ் உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

