இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு
ADDED : ஜூலை 18, 2024 08:16 PM

மும்பை: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மற்றும் கேப்டன் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.
இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று ஒரு நாள், மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் ஒரு நாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், டி-20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில், பும்பரா, ரவீந்திர ஜடஜோவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்) சுப்ம் கில் (துணை கேப்டன் ) விராட் கோலி, கே.எல். ராகுல், குல்தீ்ப் யாதவ், அக்சர் படலே், கலீல் அகமது, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர் ) ஷ்ரேயாஸ் சரண், வாஷிங்டன் சுந்தர். ரியான் பராக், ஷிவம் துபே, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
டி-2- தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:
சூரியகுமார் யாதவ் (கேப்டன் ), சுப்மன்கில் (துணை கேப்டன் ), யாஷ்வி ஜெயிஸ்வால், ரிங்குசிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), சஞ்சுசாம்சன், ஹர்திக்பாண்டியா, ஷிவம் துபே, அக்சர்படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், அர்தீப் சிங், கலீல் அகமத், முகமது சிராஜ்.