வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின்
வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின்
ADDED : மே 13, 2024 06:57 PM

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் கைதான மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.,வும் மாஜி பிரதமர் தேகவுடா மகனுமான ரேவண்ணாவுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.
ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், கடந்த 4 ம் தேதி கைது செய்யப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில், ரேவண்ணா தரப்பில் மனு செய்யப்பட்டது.
முன்னதாக அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணையும் இன்று நடந்தது. ரேவண்ணா தரப்பில் வக்கீல் நாகேஷ் ஆஜரானர். இதில் ஜாமின் வழங்க சிறப்பு புலனாய்வு குழு எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சந்தோஷ் பட், ரூ. 5 லட்சம் பிணை பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜாமி்ன் வழங்கினார்.