நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வே / தொலைபேசி
ஜூலை 9: ரயில் பயணிகள் இனிமேல், எஸ்.எம்.எஸ்., மூலம் தங்களின் இ-டிக்கெட்டை பெறலாம்.
வழக்கமான டிக்கெட் நகலுக்கு பதிலாக, மொபைல் போனில் வந்த எஸ்.எம்.எஸ்.,சை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதும் என, ரயில்வே அறிவிப்பு.
ஜூலை 11: தொலைபேசிகளுக்கு வரும் தொல்லை தரும் அழைப்புகளை இனம் காணும் வகையில், தொலைத்தொடர்புத்துறை மூன்று இலக்க எண்கள் அறிவிப்பு.
வாகனம் / சமையல் காஸ்
ஜூலை 12: டில்லியில், வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த வாகன பேன்சி எண்கள், அனைவருக்கும் வழங்க திட்டம்; ஒரு இலக்க எண்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை கட்டணம்.
ஜூலை 12: மானிய விலையில் தற்போது வினியோகிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு 4 முதல் 6 வரை ஒரு குடும்பத்திற்கு வினியோகிக்கும் திட்டம் குறித்து, மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை.

